காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
கொரானோ தொற்று பரவல் காரணமாக உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சில நாடுகளில், சில நகரங்களில் மட்டும் இயல்பான நிலை காணப்படுகிறது. தனி நபர் போக்குவரத்து, பொது போக்குவரத்து ஆகியவை இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. உலகம் முழுவதும் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான சேவைகளைக் கூட பலர் பயன்படுத்தி வருகின்றனர். அதே சமயம் வெளிநாட்டு விமான சேவைகள் முன்பைப் போல இன்னும் ஆரம்பமாகவில்லை.
நடிகர் மாதவன், சற்று முன் இன்ஸ்டாகிராம் தளத்தில் சில வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார். ஜுலை 26ம் தேதியன்று 'அமெரி கி பன்டிட்' படப்பிடிப்பு, வேடிக்கையாக ஆனால், சோகமாக. இது சீக்கிரமே முடிவடைய பிரார்த்திக்கிறேன். அதனால், அன்பானவர்கள் ஒருவருக்கொருவர் ஒன்றாக இருக்கலாம்,” என்று குறிப்பிட்டுள்ளார். துபாய்க்கு அவர் சென்ற விமானத்தில் அவர் ஒருவர் மட்டுமே பயணித்துள்ளார். விமான நிலையம், விமானநிலைய ஓய்வறை, விமானத்திற்குள் என அவர் மட்டுமே இருக்கிறார். அவ்வளவு இருக்கைகள் கொண்ட விமானத்தில் மாதவன் மட்டுமே பயணித்தாரா என்பது ஆச்சரியமாக உள்ளது.
“எப்படி அவ்வளவு இருக்கைகள் காலியாக உள்ளன, ஒரு விதமான பயமாக உள்ளது,”, “நம்ப முடியாத ஒன்று”, “சினிமாவில் வரும் காட்சி போல உள்ளது, விமான நிலையம், விமானத்தில் தன்னந்தனியாக”, “இது நகைச்சுவையாக உள்ளது, எத்தனை இருக்கைகள் வேண்டுமானால், நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்,” என ரசிகர்களும் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்துள்ளனர். இன்ஸ்டாகிராம் பதிவை டுவிட்டரில் பகிர்ந்து, “இதுவரையில் இல்லாத வித்தியாசமான விமானம்,” எனக் குறிப்பிட்டுள்ளார் மாதவன்.