ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிக்பாஸ் சீசன் 5 குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், சீசன் 5-க்கான புரோமோ ஷூட் புகைப்படங்கள் என இணையத்தில் சில புகைப்படங்கள் வலம் வருகிறது.
விஜய் டிவியின் நம்பர் 1 ரியாலிட்டி ஷோவாக ஹிட் அடித்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த ஜூன் மாதத்தில் தொடங்க இருந்தது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளிப்போனது. எனவே, சென்ற வருடம் போலவே இந்த வருடமும் அக்டோபர் மாதத்தில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 5-க்கான புரோமோ ஷூட்டிங்கில் கமல்ஹாசன் கலந்து கொண்டதாக சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் மக்கள் பலரும் மிகுந்த ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவராத நிலையில் இம்மாத இறுதியில் தொலைக்காட்சி சார்பில் சீசன் 5 குறித்தான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.