12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் |
தமிழ் சினிமாவில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்தவர் யாஷிகா ஆனந்த். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்சில் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டு திரும்பியபோது விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் அவரது தோழி பவனி உயிரிழந்தார்.
தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள யாஷிகா விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து பேசி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: விபத்து நடந்த அன்று இரவு நாங்கள் 4 பேர் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இரவு உணவு சாப்பிடச் சென்றோம். அங்கிருந்து 11 மணியளவில் சென்னைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தோம்.
அப்போதுதான் அந்த விபத்து நிகழ்ந்தது. காரை ஓட்டியது நான் தான். ஆனால், நிச்சயமாக நான் வேகமாக ஓட்டவில்லை. சாலை மிகவும் இருட்டாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரை கவனிக்காமல் அதன் மீது மோதிவிட்டேன். மோதிய வேகத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்து மூன்று முறை உருண்டது.
எனக்கு பக்கத்து சீட்டில் பவனி அமர்ந்திருந்தார். அவர் சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை. காற்று வாங்குவதற்காக ஜன்னல் கண்ணாடியையும் திறந்து வைத்திருந்தார். எனவே கார் விபத்துக்குள்ளானபோது அவர் ஜன்னலுக்கு வெளியே சென்று விழுந்தார். அவரது தலையில் பலமாக அடிபட்டது. மற்ற மூவரும் காருக்கு உள்ளேயே தான் இருந்தோம்.
காரின் கதவுகள் லாக் ஆகி விட்டதால் எங்களால் வெளியேற முடியவில்லை. பின்னர் சன் ரூப் கண்ணாடியைத் திறந்து வெளியேறினோம். சில நிமிடங்களிலேயே அங்கு பெரும் கூட்டம் கூடிவிட்டது. என்னால் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை. என் உடல் ழுழுவதும் செயலிழந்து விட்டதைப் போல உணர்ந்தேன். நாங்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். நான் குணமடைந்த பின்னரே பவனி இறந்த செய்தி என்னிடம் சொல்லப்பட்டது.
நான் அன்று குடிக்கவில்லை. எந்தவிதப் போதைப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. அது ஒரு சிறு கவனச் சிதறலால் ஏற்பட்ட ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து. அது எங்கள் வாழ்க்கையையே மாற்றி விட்டது. அதற்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒரு மிகப்பெரிய குற்ற உணர்ச்சி என்னை ஆட்கொண்டிருக்கிறது. அதோடுதான் நான் இனி என்றென்றும் வாழ வேண்டும்.
நான் உயிர் பிழைத்திருக்கக் கூடாது என்று விரும்புகிறேன். பவானியும், பவானியின் பெற்றோர்களும் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.