ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
பொதுவாகவே போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அடிக்கடி நடிக்க வேண்டும் என ஆர்வம் காட்டும் சினிமா ஹீரோக்கள், வக்கீலாக நடிப்பதில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் அந்த கதாபாத்திரத்திற்காக பக்கம் பக்கமாக வசனம் பேச வேண்டும் என்பதுடன், அதில் ஆக்சன் காட்சிகளுக்கும் வாய்ப்பு ரொம்பவே குறைவு என்பதும் மிக முக்கிய காரணம்.
அதனால் தான் கடந்த இருபது வருடங்களுக்கு முன் தமிழன் என்கிற ஒரே ஒரு படத்தில் வழக்கறிஞராக நடித்த விஜய், அதன்பின் அதுபோன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்யவில்லை. அவரது தந்தை இயக்கிய சுக்ரன் படத்தில் கூட கெஸ்ட் ரோலில் தான் லாயராக நடித்திருந்தார். இத்தனை வருட திரையுலக பயணத்தில் அஜித்தும் கூட 'நேர்கொண்ட பார்வை' என்கிற ஒரு படத்தில் தான் வழக்கறிஞராக நடித்துள்ளார்.
அதேபோல இத்தனை வருடங்களில் நடிகர் சூர்யாவும் தற்போது தான் ஜெய் பீம் என்கிற படத்தில் முதன்முறையாக வழக்கறிஞராக நடித்திருக்கிறார். அதிலும் கூட இந்தப்படத்தில் அவர் சற்றே நீட்டிக்கப்பட்ட கெஸ்ட் ரோலில் தான் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொண்ணூறுகளில் பக்கம் பக்கமாக வசனங்களை பேசி அதற்காகவே கைதட்டல் வாங்கிய விஜயகாந்த் கூட, ஒருசில படங்களில் மட்டுமே வழக்கறிஞராக நடித்திருந்தார் என்கிறபோது மற்றவர்கள் எல்லாம் எம்மாத்திரம்?