நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் |

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அடையாளத்துடன் இருப்பவர் ஷங்கர். ரஜினிகாந்தை வைத்து பல கோடிகளில் உருவான '2.0' படம் மூலம் இந்திய அளவிலும் பேசப்படுவோம் என எதிர்பார்த்தார். ஆனால், அந்தப் படம் எதிர்பார்த்த பெரிய வெற்றியைப் பெறவில்லை. அடுத்து 'இந்தியன் 2' படத்தில் அந்த இந்திய சாதனையைச் செய்துவிடலாம் என எதிர்பார்த்தார். கடைசியில் முக்கால்வாசி படத்தை முடித்தபின் படத்தை அப்படியே விட்டுவிட்டு தெலுங்குப் பக்கம் போய்விட்டார்.
தெலுங்கில் ராம் சரண் நடிக்க பான்-இந்தியா வெளியீடாக புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். 'ஆர்சி 15' என்று அழைக்கப்படும் அப்படத்திற்கு தமன் இசையமைக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'பாய்ஸ்' படத்தில் ஒரு கதாநாயகனாக நடித்தவர் தமன். தற்போது தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். முதன் முதலாக ஷங்கர் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
ஷங்கர் இதுவரையிலும் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் ஆகியோரைத் தான் தனது படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிய வைத்துள்ளார். இப்போது அவர்களை விட்டு விலகி ஒரு பான்-இந்தியா படத்திற்கு தமனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருப்பது ரஹ்மான், ஹாரிஸ், அனிருத் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.




