துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், மூத்த நடிகை மேனகாவின் மகள். தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'ரஜினி முருகன்' படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து தொடரி, பைரவா, ரெமோ, சாமி 2, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'நடிகையர் திலகம்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருதை பெற்றார். இதையடுத்து ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துவிட்டார். தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் 'சர்காரு வாரி பாட்டா' படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து அருண் மாதேஷ் இயக்கத்தில் செல்வராகவனுடன் இணைந்து சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. தற்போது படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதால் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் தான் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகத் தெரிவித்து இருந்தார்.
தற்போது கீர்த்தி சுரேஷ் ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சாணிக்காயிதம் படப்பிடிப்பு அங்கு தான் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருவத்து குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் பயங்கர ஆயுதங்களுடன் கைதான வழிப்பறி கொள்ளையர்கள் போல காண்பிக்கப்பட்டிருந்தனர். அந்த போஸ்டர் நல்ல வரவேற்பைப் பெற்றது.