ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். ஜார்ஜியாவில் பீஸ்ட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.
கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் படத்தின் படப்பிடிப்பும் அதே கோகுலம் ஸ்டுடியோவில் தான் நடைபெற்று வருகிறது. சர்தார் படத்தில் கார்த்தி வயதான தந்தை மற்றும் மகனாக இரு வேடங்களில் நடிக்கிறார். அவர் வயதானவராக நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.
சர்தார் படத்துக்காக போடப்பட்ட முதியவர் தோற்றத்தில் கார்த்தி திடீரென்று விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு அரங்குக்கு சென்றுள்ளார். முதியவர் தோற்றத்தில் இருந்ததால், அங்கு கார்த்தியை யாருக்கும் அடையாளம் தெரியவில்லையாம். இதனால் சில நிமிடங்கள் ஓரமாக நின்று படப்பிடிப்பை பார்த்துக்கொண்டு இருந்த அவர், பின்னர் நடிகர் விஜய் அருகில் சென்று நான்தான் கார்த்தி என்று தன்னை அறிமுகம் செய்துள்ளார். கார்த்தியின் தோற்றத்தை பார்த்த ஆச்சர்யப்பட்ட விஜய் உங்களை அடையாளமே தெரியவில்லை என்று சொன்னாராம். பின்னர் இருவரும் நலம் விசாரித்தனர். அப்போது கார்த்தியிடம் பேசிய விஜய் “உங்கள் படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். நன்றாக நடிக்கிறீர்கள்” என்று பாராட்டி உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் சுமார் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டு இருந்த கார்த்தி, பின்னர் தனது சர்தார் படப்பிடிப்பு தளத்துக்கு புறப்பட்டுச் சென்றாராம்.