ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். தமிழை விட தெலுங்கில் அதிகப் படங்களில் நடிக்கிறார். தமிழில் அவர் கைவசம் உள்ள படம், எஸ்.பி.ஜனநாதனின் லாபம். தெலுங்கில் இந்த வருடம் அவரது நடிப்பில் வக்கீல் சாப் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த வருடம் வெளியான மற்றுமொரு தெலுங்குப் படம் ரவி தேஜாவின் கிராக். ஹிந்தியில் தி பவர் படத்திலும் நடித்திருந்தார். பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் சலார் திரைப்படத்திலும் இவர் தான் நாயகி.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது : நான் ஒரு உளவியல் மாணவி. நான் கல்லூரியை விட்டுப் பாதியில் வெளியேறினாலும் உளவியல் படிப்பைத் தொடர்ந்தேன். மனநல ஆலோசகர்கள் பலர் என் நண்பர்களாக இருக்கின்றனர். சிறு வயதிலும் இப்போதும் நான் மனநல ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன். மகிழ்ச்சியோ அழுத்தமோ திரைத்துறையில் இரண்டுமே அதிகம் மனநலம் என்பது மிகவும் சாதாரணமான அதே நேரத்தில் மிகவும் சிக்கலான ஒன்று. நமக்கு வயிற்று வலி ஏற்பட்டால் முதல் நாள் காரமான பொருட்களைத் தவிர்த்து விடுவோம். இரண்டாவது நாள் வீட்டிலேயே இருக்கும் சாப்பிடுவோம். மூன்றாவது நாளும் வலி தொடர்ந்தால் தான் மருத்துவரிடம் சென்று உதவி கேட்போம். ஆனால், மனநலம் என்று வரும்போது எதுவும் நடக்காததுபோல தலையைத் தூக்கி நான் நலமாக இருக்கிறேன் என்று சொல்வது மோசமானது. மன நலனை பொறுத்தவரை தாங்கள் எந்தவகையான பிரச்சினையில் இருக்கிறோம் என்பது குறித்தே பலருக்கும் தெரிவதில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




