சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இம்மனு நாளை மறுநாள் (ஜூலை 19) விசாரணைக்கு வருகிறது.
பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். அபராதத் தொகையை கொரோனா நிவாரண நிதியில் சேர்க்கவும் உத்தரவிட்டார். நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்தவும் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும்; ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவின் நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனுவுக்கு எண் வழங்கி விசாரணைக்கு பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிடக் கோரியும் கூடுதலாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மஞ்சுளா அடங்கிய அமர்வில் வரும் 19ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.