ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா | மலையாளத்தில் அறிமுகமாகும் பிரீத்தி முகுந்தன் | ‛மதராஸி' படம் செப்.5ம் தேதி திரைக்கு வருகிறது | குட் பேட் அக்லி : ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் | 4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் |
பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார், உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஜூலை 07) காலமானார். அவருக்கு வயது 98.
பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமாருக்கு வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், வீடு திரும்புவதுமாக இருந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 30ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி திலீப் குமார் காலமானார். திலீப் குமாரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். திலீப் குமார், இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1994ல் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.