மினி இட்லியாக சுவைக்கப்படணும் : பார்த்திபன் ஆசை | கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வரும் குஷி ரவி | ஹீரோவான ‛பிக் பாஸ்' விக்ரமன் | ‛பறந்து போ' கிரேஸ் ஆண்டனிக்கு திருமணம் : 9 வருட காதலரை மணந்தார் | பிளாஷ்பேக் : 33 முறை மோதிய விஜயகாந்த், பிரபு படங்கள் | பிளாஷ்பேக்: முத்துராமலிங்கத் தேவர் பார்த்த ஒரே படம் | இன்று ரவிமோகன் பிறந்த நாள்: சிறப்பு போஸ்டர்கள் வெளியிட்டு வாழ்த்து | மடோனா, இவ்வளவு அழகாகப் பாடுவாரா ? | திருமணம் எப்போது? அதர்வா நச் பதில் | அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் : பிஸியாகும் நேரு ஸ்டேடியம் |
ஹிந்தி திரையுலகமான பாலிவுட்டில் அதிக படங்கள் இயக்கிய தமிழ் இயக்குனர் யார் என்று கேட்டால், கே.பாலச்சந்தர், ஏ.ஆர்.முருகதாஸ், பிரபுதேவா, அட்லி படங்களைத்தான் கணக்கு பார்ப்பார்கள். ஆனால் பாலிவுட்டில் அதிக படங்களை இயக்கிய தமிழ் இயக்குனர் எஸ்.எஸ்.வாசன். அவர் இயக்கிய படங்கள் அனைத்தையும் அவரே தயாரித்தார்.
தனது முதல் படமான சந்திரலேகாவை முதன் முதலாக பாலிவுட்டில் அதே பெயரில் இயக்கினார். அதன் பிறகு நிஷான், மங்களா, சன்சார், மிஸ்டர் சம்பத், பகத் இன் ஹவ், இசன்யாத், ராஜ் திலக், பைகாம், கஹர்னா, தீன் பஹாருனியன், சத்ரங்கி படங்களை இயக்கினார்.
பெரும்பாலான படங்களை தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இயக்கினார். படங்களுக்கு ஹிந்தி மொழி டப்பிங் பேசுவதற்கென்றே தனி ஸ்டூடியோ கட்டினார். அதில் நிரந்தரமாக ஹிந்தி டப்பிங் கலைஞர்களை பணி அமர்த்தினார்.