ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
பொதுவாக இளையராஜா பிற இசை அமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்ப மாட்டார். அபூர்வமாக இது நடந்திருக்கிறது. 1986ம் ஆண்டு வெளிவந்த 'மெல்ல திறந்தது கதவு' என்ற படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து இசை அமைத்திருந்தார். மோகன், அமலா, ராதா நடித்த இந்த படத்தை ஆர்.சுந்தர்ராஜன் இயக்கி இருந்தார். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.
இந்த படத்திற்கு முன்னதாக அதாவது 1985ம் ஆண்டு ராமராஜன் இயக்கத்தில் உருவான 'ஹலோ யார் பேசுறது' என்ற படத்திற்கு கங்கை அமரனுடன் இணைந்து இசை அமைத்தார் இளையராஜா. ஆனால் இந்த படத்தின் பாடல்கள் பெரிதாக பேசப்படவில்லை. இந்த படத்தில் சுரேஷ், ஜீவிதா, கவுண்டமணி, செந்தில் நடித்திருந்தார்கள்.