பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
பிரபல எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலை. ஏராளமான ஆவணப் படங்களை இயக்கி உள்ள இவர் செங்கடல் என்ற படத்தை இயக்கினார். தற்போது அவர் மாடத்தி என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் நீ ஸ்ட்ரீம் எனும் ஒடிடி தளத்தில் இந்த படம் வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த படம் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பல தளங்களில் பைரசியாகவும் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இயக்குனர் லீனா மணிமேகலை தனது டுவிட்டரில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பைரசியில் படம் பாக்கிறவங்களுக்கு ஒரு வேண்டுகோள்.கோடிகளைக் கொட்டி எடுக்கப்படும் படங்களை அதைவிட கோடிகளைக் கொடுத்து வாங்கிக் கொள்கின்றன நிறுவனங்கள்.மாடத்தி படத்தின் நிலவரம் வேறு. நீ ஸ்ட்ரீம் தளத்தில் நீங்கள் டிக்கெட் வாங்கிப் பார்த்தால் மட்டுமே நான் அடுத்தமாதம் வீட்டுவாடகை கட்டமுடியும். என்று கூறியுள்ளார்.