லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'டாக்டர்'. இப்படம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் படத்தின் தயாரிப்பாளர் கேஜேஆர் ஸ்டுடியோஸ் ஓடிடி முடிவை எடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதே சமயம் , “வலிமை, டாக்டர், மாநாடு” உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தால் தியேட்டர்களுக்கு மக்கள் மீண்டும் வருவார்கள் என தியேட்டர்காரர்கள் காத்திருந்தார்கள்.
அவர்கள் காத்திருப்பிற்கு ஏமாற்றமளிக்கும் விதத்தில் 'டாக்டர்' படத்தின் ஓடிடி வெளியீடு அமைந்துள்ளதால் தியேட்டர்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளார்கள். இது தொடர்பாக அவர்களது வாட்சப் குழுக்களில் இன்னும் ஒரு மாதத்தில் தியேட்டர்களைத் திறக்க அரசு அனுமதி கொடுக்கும் எனத் தெரிகிறது. தியேட்டர்காரர்களும், வினியோகஸ்தர்களும் படத் தயாரிப்பாளரிடம் பேசி, படத்தைத் தியேட்டர்களில் வெளியிட வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
இதனிடையே காலையில் டாக்டர் படம் ஓடிடி வெளியீடு டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. ஆனால் சற்றுநேரத்திற்கு முன் டாக்டர் தியேட்டரில் வெளியாகும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என டிரெண்ட் ஆனது.