அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
‛அண்ணாத்த' படத்தை முடித்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த், வழக்கமான தனது உடல்நல பரிசோதனைக்காக கடந்தவாரம் அமெரிக்கா சென்றார். இதற்காக மத்திய அரசிடம் அவர் சிறப்பு அனுமதி பெற்று சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே ரஜினியின் அமெரிக்க பயணம் குறித்து நடிகை கஸ்தூரி சில கேள்விகளை டுவிட்டரில் முன்வைத்திருந்தார்.
அதாவது, இந்தியாவிலிருந்து யாரும் அமெரிக்க வர அந்நாடு தடை செய்துள்ள நிலையில் ரஜினி மட்டும் எப்படி அங்கு சென்றார். உடல் நலப் பரிசோதனை என்றால் இந்தியாவில் சிறந்த சிகிச்சை இல்லையா, ரஜினிக்கு அப்படி என்ன உடல்நலக் கோளாறு'' என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார் நடிகை கஸ்தூரி. இவரின் டுவீட் வழக்கம்போல் சர்ச்சையை ஏற்படுத்த, ரஜினி ரசிகர்கள் அதற்கு பதிலடி கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் இப்போது டுவிட்டரில், ‛‛அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி. நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி, நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புது பொலிவுடன் தலைவரை வரவேற்க தயாராகட்டும் தமிழகம்! ரஜினிகாந்த், அண்ணாத்த'' என பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.
ரஜினி அமெரிக்க பயணம் தொடர்பாக பல கேள்விகளை முன் வைத்த கஸ்தூரி, இப்போது அவர்கள் தரப்பில் என்ன விளக்கம் தந்தார்கள் என்பதை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.