லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் ஷங்கர். தற்போது கமல்ஹாசனை வைத்து இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தின் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார். இப்படத்தை முடித்துக் கொடுக்காமலேயே தெலுங்கில் ராம் சரண் படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். அடுத்து ரன்வீர் சிங்கை வைத்து 'அந்நியன்' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப் போகிறார்.
தங்களது 'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு எந்தப் படத்திற்கும் ஷங்கர் போகக் கூடாது என தயாரிப்பு நிறுவனமான லைக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.
இதனிடையே, ராம் சரண் தற்போது நடித்து வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பில் உள்ளார். ஜுலை மாதத்திற்குள் அவரது வேலைகள் முடிந்து விடும் எனத் தெரிகிறது. எனவே, ஷங்கர் படத்தை ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்க அவர் முடிவு செய்துள்ளாராம்.
ஆனால், 'இந்தியன் 2' வழக்கின் தீர்ப்பு தெரியாமல் ராம் சரண் படத்தை ஷங்கர் இயக்க போகவும் முடியாது. எனவே, தனது படம் குறித்து முடிவு செய்ய ஷங்கருக்கு ராம் சரண் ஒரு வாரம் 'டைம்' கொடுத்துள்ளார் என்றும், அதற்குள் அவரது முடிவைத் தெரிவிக்குமாறும் கூறியுள்ளாராம். இல்லையெனில் வேறு இயக்குனரின் படத்தில் நடிக்க ராம் சரண் முடிவெடுக்க வேண்டும் என டோலிவுட்டில் சொல்கிறார்கள்.