மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சிற்பி இசையமைப்பில் சரத்குமார், மீனா, குஷ்பு, விஜயகுமார், கவுடண்மணி, செந்தில், மனோரமா மற்றும் பலர் நடிக்க 1994ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் 'நாட்டாமை'.
இப்படத்தை தெலுங்கில் 'பெத்த ராயுடு' என்ற பெயரில் ரீமேக் செய்து 1995ம் ஆண்டு வெளியிட்டு அங்கும் பெரிய வெற்றியைப் பெற்றார்கள். தெலுங்கு ரீமேக்கை ரவி ராஜா பினி செட்டி இயக்க, மோகன் பாபு, சௌந்தர்யா, பானுப்ரியா ஆகியோருடன் ரஜினிகாந்தும் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.
தமிழில் விஜயகுமார் நடித்த கதாபாத்திரத்தைத்தான் தெலுங்கில் ஏற்று நடித்தார் ரஜினிகாந்த். மோகன் பாபுவும், ரஜினிகாந்தும் நெருங்கிய நண்பர்கள், மோகன் பாபு கேட்டுக் கொண்டதால் அவருக்காக அக்கதாபாத்திரத்தில் நடித்தார் ரஜினி. ரஜினியின் நடிப்பும், அவரது கதாபாத்திரமும் தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அப்படம் வெளிவந்து இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவடைகிறது. படத்தை இயக்கிய ரவி ராஜா பினிசெட்டியின் மகன் நடிகர் ஆதி, அப்படம் பற்றி நினைவுகூர்ந்து, “ஆல் டைம் பிளாக் பஸ்டர் 'பெத்தராயுடு' படத்தின் 26வது வருடக் கொண்டாட்டம். எனது அப்பா இயக்கிய படங்களில் எனக்குப் பிடித்த ஒன்று, தனித்துவமான மோகன்பாபு சார், சிறப்புத் தோற்றத்தில் தலைவர் ரஜினிகாந்த் ஆகியோருடன்....இதன் மகத்துவம் மீள முடியாத ஒன்று...,” எனக் குறிப்பிட்டுள்ளார்.