சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு | ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் 'காட்டாளன்' பர்ஸ்ட்லுக்கு வெளியீடு | தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் |
திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்கள், நடிகைகள் முன்பெல்லாம் டிவிக்களில் பேட்டி கொடுக்க மட்டும் தான் செல்வார்கள். அவர்களில் யாரையாவது டிவி நிகழ்ச்சியைத் தொகுக்கவோ, டிவி தொடர்களில் நடிக்கவோ அழைத்தால் அவ்வளவு கோபப்படுவார்கள்.
சினிமாவில் மார்க்கெட்டை இழந்தவர்கள் தான் டிவி பக்கம் செல்வார்கள் என்ற ஒரு இமேஜ் இருந்ததே அதற்குக் காரணம். ஆனால், போகப் போக அந்த நிலை மாறியது. கமல்ஹாசன், சரத்குமார், சூர்யா, ஆர்யா, அரவிந்த்சாமி, பிரகாஷ் ராஜ், விஷால், விஜய் சேதுபதி என பலரும் டிவி பக்கம் பெரிய ஷோக்களை தொகுத்து வழங்கினார்கள்.
விஜய் சேதுபதி அடுத்து 'மாஸ்டர் செப்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியை கன்னடத்தில் 'நான் ஈ' சுதீப்பும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்க உள்ளார்களாம். தமன்னா இதுவரை எந்த ஒரு டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியதில்லை. முதல் முறையாக இந்த 'மாஸ்டர் செப்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார். இதற்காக அவருக்கு மிகப் பெரும் தொகை சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.