மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆட்சி மாறினால் காட்சிகள் மாறும் என்று சொல்வார்கள். அது போல தற்போது சில காட்சிகள் மாறி வருகின்றன. காட்சிகள் என்பது சினிமாவிற்கு ரொம்பவே பொருந்தும். எனவே, தமிழ்த் திரையுலகத்தில் சில மாற்றங்கள் வருமா என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்ற ஸ்டாலினை பல்வேறு திரையுலகச் சங்கத்தினரும், சில முக்கிய பிரபலங்களும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தரைவயில் முக்கிய சங்கமான தயாரிப்பாளர் சங்கம் தற்போது மூன்றாகப் புரிந்துள்ளது. நீண்ட வருடங்களாகவே தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) ஆகியவை செயல்பட்டு வந்தன.
கடந்த வருடம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து சிலர் பிரிந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற புதிய சங்கத்தை ஆரம்பித்தனர். அதன் தலைவராக பாரதிராஜா இருக்கிறார். 100க்கும் மேற்பட்டவர்கள் இந்த சங்கத்தின் உறுப்பினர்களாக இணைந்ததாக சங்கம் ஆரம்பித்த போது தெரிவித்தார்கள்.
பாரதிராஜா தற்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் முதல்வரைச் சந்தித்த போது கூட இருவரும் ஒன்றாகவே சென்றனர். இந்த விவகாரம் சங்கத்திற்குள் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இந்த சங்கத்தில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் நிர்வாகிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற டி.ராஜேந்தர் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற ஒன்றை ஆரம்பித்தார். ஆனால், சீக்கிரத்திலேயே அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். சில நிர்வாகிகளும் அந்த சங்கத்திலிருந்து வெளியேறினார்கள். இப்போது அந்த சங்கத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும்.
இந்த இரண்டு புதிய சங்கங்களின் தாய் சங்கமான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய சங்கத்தில் இணைந்தவர்களை தாய் சங்கத்தில் வந்து இணையுமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் சிலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தெரிகிறது.
இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையுலகினருக்கான தடுப்பூசி முகாம் பிலிம் சேம்பர் வளாகத்தில் நடைபெற்றது. அதில் அமைச்சர் மா.சுப்பிரமணியம், சட்டசைபை உறுப்பினரும், தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் ஆளும் கட்சியின் ஆதரவு தாய் சங்கமான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்குத்தான் இருக்கிறது என அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பேசி வருவதாக திரையுலகில் தெரிவிக்கிறார்கள்.
எனவே, பிரிந்து போன சங்கத்தினர் மீண்டும் தாய் சங்கத்துடன் இணைந்து தமிழ்த் திரையுலகத்திற்குத் தேவையானவற்றை அரசிடம் கேட்டுப் பெறுவோம் என ஆலோசனை சொல்லி வருகிறார்களாம்.
பிரிந்த சங்கங்களுக்கு படத்தின் தலைப்புக்கு அனுமதி பெறுவது மற்றும், விளம்பர அனுமதிக்கான உரிமத்தை திரைப்படத் தணிக்கைத் துறை கடந்த மாதம்தான் வழங்கியது. இதன் மூலம் இந்த சங்கங்களும் முழுமையாக தனித்து செயல்படும் சூழலுக்கு மாறிவிட்டன. இருப்பினுத் தமிழ்த் திரையுலகத்தின் நலன் கருதி ஒன்றாக இணைவார்களா அல்லது தனித்தனியாகவே செயல்படுவார்களா என்பது தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின்பு தெரிய வரும்.