மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தியாவில் உள்ள திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பல துறையில் பணிபுரியும் பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்கள் குறித்து மீடூ வில் வெளியிட்டு வந்தனர். பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பாக்கினார் பாடகி சின்மயி. மேலும் பாலியல் புகார்கள் தொடர்பான எந்த செய்திகள் வந்தாலும் அதில் வைரமுத்து தொடர்பான விஷயத்தையும் அவர் குறிப்பிட மறந்தது இல்லை.
இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் பாலியல் ரீதியான குற்றச்செயல்களில் ஈடுபட்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திமுகவின் கனிமொழி விமர்சனங்களை முன்வைத்தபோது இதற்கு குரல் கொடுக்கும் நீங்கள் வைரமுத்து மீது பாலியல் புகார் சொன்னபோது எதுவுமே சொல்லவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அதோடு வைரமுத்துவிற்கு கேரளாவின் ஓ.என்.வி இலக்கிய விருது வழங்கப்பட இருந்தபோதும் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கா அந்த உயரிய விருதினை கொடுக்கப் போகிறீர்கள் என்று சமூகவலைதளத்தில் பதிவிட்டார். அதையடுத்து பலரும் வைரமுத்துவிற்கு விருது கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அந்த விருது குறித்து மறுபரிசீலனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட, அதன்பிறகு வைரமுத்துவும் அந்த விருதினை தான் திருப்பி தருவதாக அறிவித்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தற்போது சின்மயி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‛‛நாட்டில் எங்கு பாலியல் பிரச்சினை வெடித்தாலும் உடனே வைரமுத்து பிரச்சினையை வெளியிட்டு அனைவரையும் திசை திருப்புகிறார் சின்மயி என்று என்னை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
நான் யாரையும் திசை திருப்பவில்லை. நான் திசை திருப்பினால் நீங்கள் ஏன் என் பக்கம் திரும்புகிறீர்கள்? என்று ஒரு கேள்வி கேட்டுள்ள சின்மயி, மீடூவில் நான் மட்டுமே வைரமுத்து மீது குற்றச்சாட்டு வைத்தது போலவே சித்தரிக்கிறார்கள். ஆனால் வைரமுத்து மீது நான் மட்டும் குற்றச்சாட்டவில்லை, 17 பெண்கள் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்கள். அவரது ஹாஸ்டலில் தங்கியிருந்த பல பெண்கள் தொல்லை தாங்க முடியாமல் தலைதெறிக்க ஓடியிருக்கிறார்கள். ஆனபோதும் சின்மயி பொய் சொல்கிறார். நான்தான் உத்தமன் என்பது போலவே வைரமுத்து தொடர்ந்து பேசி வருகிறார்.
வைரமுத்துவை உங்கள் திருமணத்திற்கு எதற்குஅழைத்தீர்கள்? என்று என்னை கேட்கிறார்கள். அவரை ஏன் அழைக்கவில்லை என்று அப்போது எழுந்த கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் தான் அழைத்தேன். மேலும், 2014ல் வைரமுத்துவின் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கருணநிதி பங்கேற்றார். அதில் நீ வந்து பாடவேண்டும் என்று அழைத்தார் வைரமுத்து. நான் மறுத்ததால் நீ கருணாநிதி பற்றி தவறாக பேசியதாக அவரிடத்தில் சொல்வேன் என்று மிரட்டினார்.
இதுகுறித்து நான் மதன்கார்க்கியிடம் சொன்னபோது, அவர் அப்படித்தான் அவர் நினத்தபடி நடக்கவில்லை என்றால் அப்செட்டாகி விடுவார் என்று கூறினார். அதையடுத்து நீங்கள் என்னை மிரட்டினால் கருணாநிதியிடம் அவரைப்பற்றி தவறாக நான் பேசியது போல் நீங்கள் சொல்லப்போவதாக சொன்னதை அப்படியே அவரிடத்தில் சொல்வேன். அவர் என்னை நம்புகிறாரா? இல்லை உங்களை நம்புகிறாரா என்று பார்ப்போம் என்று போனில் சொன்னேன். அப்போது போனை வைத்தவள் தான் அதன்பிறகு வைரமுத்துவிடம் பேசவே இல்லை. அவர் முகத்தை இனிமேல் பார்க்கவே கூடாது என்று நினைத்தேன்.
பின்னர் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் நான் பாடுவதற்கு அவர் தான் சிபாரிசு செய்ததாக சொல்கிறார்கள். இது தவறு, சீனிவாசன் என்பவர்தான் ஏ.ஆர்.ரகுமானிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பிறகு தான் அவர் என்னை பாட வைத்தார். அதனால் என்னை வைரமுத்து தான் ஏ.ஆர்.ரகுமானிடம் அறிமுகம் செய்து வைத்தார் என்று வெளியாகும் செய்திகள் தவறானவை என்றும், அந்த வீடியோவில் தனக்கும் வைரமுத்துவிற்குமிடையில் நடந்த பல விசயங்களை வெளியிட்டுள்ளார் பாடகி சின்மயி.