ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் இசைப்பட்டறையில் இருந்து உருவானவர் தான் வளர்ந்து வரும் பிரபல பின்னணி பாடகி தீ. இவரது பாடலுக்கு என மிகப் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த வகையில் விரைவில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் தக் லைப் திரைப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற போது, மேடையில் இந்த பாடலை சின்மயி பாடினார். கடந்த சில வருடங்களாக சின்மயி தமிழில் பாட மறைமுக தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் இந்த பாடலை பாடியதும் பலரும் ஏற்கனவே இந்தப் பாடலை பாடிய 'தீ'யின் குரலையும் சின்மயியின் குரலையும் ஒப்பிட்டு சின்மயிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவிக்க துவங்கினர். இது தேவையில்லாத ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சமீபத்தில் பேசியுள்ள சின்மயி, “அன்றைய தினம் 'தீ' இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அது மட்டுமல்ல இந்த பாடலை ஏற்கனவே தெலுங்கிலும் ஹிந்தியில் நான் பாடி இருந்ததால் 'தீ'க்கு ஒரு மாற்றாக தான் இந்த பாடலை நான் மேடையில் பாட வேண்டிய சூழல் வந்தது. ஆனால் பலரும் தேவையில்லாமல் எங்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசுவது வருத்தத்தை அளிக்கிறது. அவர் இப்போதுதான் நன்றாக வளர்ந்து வரக்கூடிய பாடகியாக இருக்கிறார். என்னுடைய 16 அல்லது 18 வயதில் இப்படி என்னை பாட சொல்லி இருந்தால் நான் நிச்சயமாக என்னால் முடிந்திருக்காது. 'தீ'யைப் பொறுத்தவரை அவர் 100 சின்மயி இல்லை, 100 ஸ்ரேயா கோஷல்களை தூக்கி சாப்பிட்டுவிட்டு விடுவார். அந்த அளவிற்கு திறமையானவர்” என்று தனது வருத்தத்தை தெரிவித்ததுடன், அவரை சிலாகித்து பாராட்டியும் உள்ளார் சின்மயி.




