பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
30 ஆண்டுகளுக்கு முன்பு, விஜய் நடிப்பில் வெளியாகி முதல் முறையாக அவருக்குள் இருந்த ஒரு நடிகரை அடையாளம் காட்டி அவருக்கு கமர்சியல் வெற்றியும் தேடி கொடுத்த படம் பூவே உனக்காக. அந்த படத்தில் அஞ்சு அரவிந்த், சங்கீதா என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இருந்தாலும் அஞ்சு அரவிந்த் தான் ரசிகர்களிடம் அதிக கவனம் பெற்றார். அதனை தொடர்ந்து சில வருடங்கள் தமிழ் மற்றும் மலையாளத்தில் மாறி மாறி நடித்தார். இவரது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்துவிட, உடனடியாக இரண்டாவது திருமணம் செய்தார். ஆனால் இரண்டாவது கணவர் எதிர்பாராத விதமாக குறுகிய காலத்திலேயே மரணத்தை தழுவினார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஞ்சு அரவிந்த் கூறும்போது, சஞ்சய் அம்பலபரம்பத் என்பவரிடம் தான் ஐந்து வருடமாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.
இத்தனைக்கும் இவர் யாரோ புதியவரல்ல. அஞ்சு அரவிந்துக்கு 8 வயதாக இருக்கும் போது பள்ளியில் நடைபெற்ற நடன போட்டியில் பங்கேற்க வந்தபோது இவரது திறமையை பார்த்து அவர் மீது தனி கிரஷ் அப்போதே ஏற்பட்டது என்றும், அதன்பிறகு அவரவர் வழிகளில் பயணம் பிரிந்து விட்டது என்றும், இப்படித்தான் நாங்கள் இணைய வேண்டும் என காலம் தீர்மானித்திருக்கிறது என்றும் கூறியுள்ளார் அஞ்சு அரவிந்த்.
பெங்களூரில் தற்போது அகாடமி ஆப் டான்ஸ் என்கிற பெயரில் நடனப்பள்ளி நடத்தி வரும் அஞ்சு அரவிந்த், இப்படிப்பட்ட ஒரு அடையாளம் எனக்கு பெங்களூரில் கிடைக்க காரணமே சஞ்சய் அம்பலபரம்பத் தான் என்றும் கூறியுள்ளார்.