ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

தமிழ் திரையுலகில் சமீபத்தில் மூத்த நடிகர் ராஜேஷ் மறைந்த சோகம் அடங்குவதற்குள் இளம் இயக்குனரான விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் இறந்தது மீண்டும் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதயானை கூட்டம் படத்தில் இயக்குனராக அறிமுகமான அவர், அதன்பிறகு ராவணக் கூட்டம் என்கிற படத்தை இயக்கினார். அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்குவது குறித்து மதுரையில் உள்ள தயாரிப்பாளரிடம் பேசிவிட்டு திரும்பும் போது தான் இந்த சோக நிகழ்வு நடந்துள்ளது. பிரபலங்கள் பலரும் இவரது மறைவுக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் விக்ரம் சுகுமாரனின் முதல் படமான மதயானை கூட்டம் படத்தின் படத்தின் மையப் புள்ளியாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றவர் நடிகை விஜி சந்திரசேகர். அவர் விக்ரம் சுகுமாரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசும்போது, “மதயானை கூட்டம் படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்த பிறகு தான் எனக்கு மிகப்பெரிய அளவில் பெயர் கிடைத்தது. நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. விக்ரம் சுகுமாரன் என்னிடம் பல கதைகளை விவாதித்துள்ளார். வரும் தை மாதம் அடுத்த படத்தை துவங்குகிறேன் என்று கூட இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னிடம் கூறினார்.
நான் கவனித்ததில் சமீபகாலமாகவே இளம் வயதிலேயே இறந்த பலரது மரணத்தை கவனித்துப் பார்த்தால் அவர்கள் இரவு பகல் என நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்ப்பவர்களாகவும், அதிக வேலைப்பளுவை சுமந்து கொண்டிருப்பவர்களாகவும் இருக்கிறார்கள். தயவுசெய்து இளம் தலைமுறையினர் அதுவும் படைப்பாளர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு முதலில் முக்கியத்துவம் தர வேண்டும்” என்று ஒரு வேண்டுகோளையும் வைத்துள்ளார்.




