மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதலே திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதிகள் தாறுமாறாக மாறிவிட்டன. சில படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட்டு சில தயாரிப்பாளர்கள் முடிந்தவரையில் தப்பித்துக் கொண்டார்கள். தளர்வுகளுக்குப் பின் தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது சில படங்கள் மட்டுமே வெளிவந்தன. மீண்டும் ஊரடங்கால் தியேட்டர்கள் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து யாராலும் எந்த யூகமும் சொல்ல முடியவில்லை. கடந்த வருடத்திய அதிகபட்ச தொற்றுடன் ஒப்பிடும் போது இன்னும் மூன்று மாதங்களுக்காவது தியேட்டர்களைத் திறக்க வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் சில நடிகர்கள் அவர்கள் நடித்து முடித்துள்ள நான்கைந்து படங்களுடன் அவற்றின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்கள். அந்த விதத்தில் சில நடிகர்களுடைய படங்கள்.....
விஜய் சேதுபதி : துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஜி.வி.பிரகாஷ்குமார் : ஐங்கரன், ஜெயில், ஆயிரம் ஜென்மங்கள், பேச்சிலர், அடங்காதே
அருண் விஜய் : அக்னிசிறகுகள், பார்டர், சினம்
விஜய் ஆண்டனி : தமிழரசன், கோடியில் ஒருவன், அக்னி சிறகுகள், காக்கி