மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர் | புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் | சண்டைக் காட்சியில் நடித்த போது விபத்து! ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் மருத்துவமனையில் அனுமதி! | ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ் | பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ் | போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆகிறது. 100க்கும் அதிகமான நாடுகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்து,ஆயிரம் கோடி வசூலை ஈட்ட வேண்டும் என்பது படக்குழுவின் திட்டமாக இருக்கிறது. ஆனால், படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது படக்குழுவையும், ரஜினி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காரணம், ஏ சான்றிதழ் என்றால் 18 வயதுக்கு குறைவானவர்கள் படம் பார்க்க முடியாது. தியேட்டர் வாசலில் திருப்பி அனுப்பி விடுவார்கள்.
ரஜினி படத்தை குழந்தைகளுடன், குடும்பமாக விசில் அடித்து ரசித்து பார்ப்பது பல ஆண்டுகால வழக்கம். ஏ சான்றிதழ் என்பதால் குழந்தைகளுடன் பார்க்க முடியாத நிலை. இது படத்தின் வசூலை பாதிக்குமா என்ற பயம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. குடும்பத்துடன் பார்த்தால்தான் ஒரு படம் ஹிட்டாகும், படத்தில் வன்முறை அதிகமா? ஏன் இப்படி என்று கேள்விகள் எழுந்துள்ளது.
பொதுவாக சென்சார்போர்டு ஏ சான்றிதழ் கொடுக்கிறோம் என சொன்னால் சில சீன்களை வெட்டி, சர்ச்சை டயலாக்குகளை நீக்க யு.ஏ சான்றிதழ் பெற முயற்சிப்பார்கள். ஆனால், லோகேஷ்கனகராஜ் அதை ஏன் செய்யவி்ல்லை. ஏ சான்றிதழுக்கு ஏன் ஓகே சொன்னார். ஒருவேளை ரீ சென்சார் அல்லது மேல்முறையீடு செய்வார்களா என்று பலருக்கு சந்தேகம்.
தவிர, படத்தின் நீளம் 2 மணி 48 மணி நேரம் என்பது கொஞ்சம் அதிகம்தான். இதெல்லாம் படத்துக்கு பிளஸா? மைனசா? லோகேசின் முந்தைய படமான லியோ வெற்றி படமாக அமையவில்லை. இப்போது கூலியிலும் இப்படி நடக்கிறதே? படத்தில் வன்முறை, போதை மருந்து, கடத்தல் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகமாக இருக்குமோ? கூலி எப்படி இருக்குமோ என இந்த சான்றிதழால் ரஜினி ரசிகர்களுக்கும் பயம் ஏற்பட்டுள்ளது.