ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில் நெகட்டிவ் ரோலில் மாணவனாக நடித்தவர் அபினய். பின்னர் ஜங்ஷன் படத்தில் ஹீரோவாக ஆனார். அடுத்து சில படங்களில் நடித்தார். அந்த காலத்தில் அவ்வளவு அழகாக, கட்டுமஸ்தான உடலுடன் இருந்தார். பின்னர், பல ஆண்டுகள் காணாமல் போனார். சில மாதங்களுக்குமுன்பு அவர் உடல்நலக்குறைவால் அவதிப்படுகிற, ட்ரீட்மென்ட் எடுக்கிற போட்டோ வைரல் ஆனது. இது அபினய் தானா என்று கேட்கும் அளவுக்கு அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இப்போது மீண்டும் அவர் சம்பந்தப்பட்ட வீடியோ வைரல் ஆகி உள்ளது. ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு அதில் அபினய் மாறியிருக்கிறார். அவருக்கு கேபிஓய் பாலா உதவுகிற வீடியோ வெளியே வந்துள்ளது. இது குறித்து அபினய் தரப்பில் விசாரித்தால், அவருக்கு லிவர் பிரச்னை.
அது முற்றிவிட்டது, இப்போது அதை மாற்றியே ஆக வேண்டும். அந்தவகை ஆபரேசனுக்கு 28 முதல் 30 லட்சம்வரை தேவைப்படுகிறது. தவிர, அதற்கான மாற்று உறுப்பு கிடைக்க வேண்டும். அதில் ரத்தம் உள்ளிட்ட பல விஷயங்கள் செட்டானால் மட்டுமே ஆபரேசன் செய்ய முடியும். மாற்று உறுப்பு பெறுவதில் இப்போது ஏகப்பட்ட சட்டசிக்கல்கள். முன்பதிவு செய்து அவர்களுக்கான முறை வந்தால் மட்டுமே அந்த உறுப்பை, நன்கொடையாளர்களிடம் இருந்து பெற முடியும். அரசிடம் பதிவு செய்து அதற்காக காத்திருக்கிறார் அபினய்.
கடும் பொருளாதார பிரச்னையிலும் இருக்கிறார். சென்னையில் வசித்தாலும் அவருக்கு நண்பர்கள், நடிகர்கள், நடிகர் சங்கம் என யாரும் உதவில்லை. சிலர் மூலம் ட்ரீட்மென்ட் பெறுகிறார். லிவர் மாற்று ஆபரேசன் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வு என்பதால் மன, பண, உடல் ரீதியான பிரச்னையில் தவித்து வருகிறார்' என்கிறார்கள்.




