கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் | தயாரிப்பாளர் ஆனார் ஆண்ட்ரியா : மாஸ்க் படத்தில் வில்லத்தனமான கேரக்டர் | பிரித்விராஜூக்கு ஜோடியாக நடிக்க ஆசை ; பாக்யஸ்ரீ போர்ஸ் |

'துள்ளுவதோ இளமை' புகழ் அபிநய், 44, உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று(நவ., 10) காலை 4 மணியளவில் காலமானார்.
2002ம் ஆண்டு வெளிவந்த படம் 'துள்ளுவதோ இளமை'. தனுஷ் அறிமுகமான இந்த படத்தில் அவருடன் இணைந்து அறிமுகமானவர் அபிநய். தனுசின் நண்பராக நடித்தார். அதன்பிறகு ஜங்ஷன், சிங்கார சென்னை, பொன் மேகலை ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். சக்சஸ், தாஸ், தொடக்கம், சொல்ல சொல்ல இனிக்கும், 'பாலைவனச் சோலை 2, ஆறுமுகம், கார்த்திக் அனிதா, கதை, 'ஆரோகணம்', என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
43 வயதான அபிநய்க்கு கல்லீரல் தொற்று பிரச்னை ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்றார். அவர் உயிரை காப்பாற்ற 28 லட்சம் ரூபாய் தேவைப்படுதாகவும், நிதி உதவி செய்யுமாறும் நண்பர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் அப்போது வேண்டுகோள் விடுத்தனர். கேபிஒய் பாலா உள்ளிட்ட சிலர் உதவி செய்தனர். சமீபத்தில் அவர் ஓரிரு சினிமா நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்று நம்பிக்கையுடன் பேசினார்.
இந்நிலையில் இன்று காலை 4 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. அபிநயக்கு உறவினர்கள் என்று பெரிதாக யாரும் இல்லை. ஓரிரு நண்பர்கள் மூலமே அவர் உதவி பெற்று வந்தார். தற்போது அவர் உடலை இறுதிச் சடங்கு செய்வதற்கு கூட யாரும் இல்லாமல் இருக்கிறது. உறவினர்கள் யாருமின்றி, தனியே தவிக்கும் அந்த உடலை சங்கங்கள் ஏதேனும் முன் வந்து அவருக்கான சடங்குகளை செய்து வழி அனுப்பினால் நல்லது.
சினிமா பல பிரபலங்களை உச்சத்திற்கு கொண்டு சென்ற அதேவேளையில் இவரைப்போன்று ஓரிரு பிரபலங்கள் ஆள் ஆரவமற்று இறந்து போன சம்பவங்களும் அவ்வப்போது நிகழத்தான் செய்கிறது. குடி போன்ற தீய பழக்கங்களால் இவர் இந்த நிலைமைக்கு ஆளாகி உள்ளார்.




