ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் அபிநயா. இவர் பேச்சு மற்றும் கேட்கும் திறன் குறைபாடு உடையவர். ஆனால் அந்த குறைபாடு தெரியாத அளவிற்கு தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி பாராட்டுகளை குவித்தவர். 13 வருடமாக காதலித்து வந்த கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கார்த்திக்கும் அபிநயாக போன்று பேச்சு மற்றும் கேட்கும் திறன் குறைபாடு உடையவர்.
இதுகுறித்து அபிநயா அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது : ‛‛நாடோடிகள் படத்தின் தெலுங்கு பகுதிப்பில் தமிழில் நடித்த அதே கேரக்டரில் நடித்தேன். அது எனக்கு தெலுங்கில் பெரிய அறிமுகத்தை கொடுத்தது. இதனால் என்னை போன்ற குறைபாடு உடையவர்கள் இணைந்து ஒரு குரூப்பை உருவாக்கினோம். அந்த குரூப் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் கார்த்திக்.
அவரும் என்னை மாதிரியே பேச்சு மற்றும் செவித்திறன் சவால் கொண்டவர்தான். அவங்க அக்காவோடுதான் வந்திருந்தார். அவங்க அக்காவும் அதேமாதிரி சவால் கொண்டவர்தான். ரெண்டு பேருமே என்கிட்ட பாசமா பேசி ப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க. இந்த உலகத்திலேயே எனக்கு அம்மாவைத்தான் ரொம்பப் பிடிக்கும். அம்மாவோட பாசத்தை அவர்கிட்ட உணர்ந்தேன். அதுதான், எங்க நட்பை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோக வெச்சது.
அவரோட குணம் எங்க குடும்பத்துல எல்லோருக்குமே பிடித்திருந்தது. அதனாலதான் வெவ்வேறு சமூகத்தினராக இருந்தாலும் ரெண்டு வீட்டிலேயும் ஓகே சொல்லிட்டாங்க. கார்த்திக் ஒரு பிசினஸ் மேன். ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில டைரக்டரா இருக்கிறார். இன்னும் சில வருடங்களுக்கு பிறகுதான் திருமணம் செய்ய நினைத்தோம். ஆனால் அம்மா இறந்து விட்டதால் தனிமையை போக்க திருமணம் செய்து கொண்டேன்'' என்கிறார்.