அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
10 ஆண்டுகளுக்கு முன்பு மூன்சூன் வெட்டிங் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் ரன்தீப் ஹூடா. அதன்பிறகு டி, ரிஸ்க், லவ் கிச்சடி, ஜன்னத் 2, காக்டெய்ல், கிக், சுல்தான், பாகி 2 உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சல்மான்கானுடன் ராதே படத்தில் நடித்தார்.
ரன்தீப் ஹூடா பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அப்போதைய உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி குறித்து காமெடியாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அப்போது கவனிக்கப்படாத அந்த விஷயம். இப்போது வீடியோவாக பரவி வருகிறது. அவர் மாயாவதியை ஜாதி ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் கொச்சைபடுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது.
இதனால் ரன்தீப் ஹூடாவை ஐக்கிய நாடுகள் சபை தனது தூதர் பதவியில் இருந்து நீக்கி உள்ளது. அவர் ஐநா சபையில் காட்டு விலங்குகள் பாதுகாப்பு அமைப்புக்கான தூதராக பதவி வகித்து வந்தார்.
இது குறித்து ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: எங்களின் தூதர் ரன்தீப் ஹூடா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர் பேசிய கருத்துகள் அவதூறாகவும், எங்கள் அமைப்பின் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத வண்ணம் உள்ளது. ஹூடா, இனி இந்த அமைப்பின் தூதராகச் செயல்பட மாட்டார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.