டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தில், உள்ளம் கொள்ளை போகுதே, பாபா உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்ர நடிகையாகவும், ஏராளமான சீரியல்களில் முதன்மை வேடத்திலும் நடித்தவர் தீபா வெங்கட். இவர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டும் கூட. சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் கொரோனாவால் இவர் உயிரிழந்துவிட்டதாக காலை முதலே சமூகவலைதளங்களில் செய்திகள் றெக்க கட்டி பறந்தன. ஆனால் அது உண்மையல்ல.
இதுகுறித்து தீபா வெங்கட்டின் அம்மா பத்மா வெங்கட்டை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‛‛என் மகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருக்கு எந்த பிரச்னையும். வீட்டில் நலமுடன் இருக்கிறார். அவர் தான் வீட்டில் எல்லா வேலைகளும் செய்கிறார். யார் இதுபோன்று செய்திகளை பரப்பி விட்டார்கள் என தெரியவில்லை. காலை முதலே நிறைய போன்கள் வந்தன. தயவு செய்து இதுபோன்ற வீண் வதந்திகளை பரப்பாதீர்கள்'' என்றார்.




