'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் : பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
சமீபத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு கேரள கவிஞர் ஓ.என்.வி., விருது அறிவிக்கப்பட்டது. மீ டூ புகாரில் குற்றம் சாட்டப்பட்ட வைரமுத்துவிற்கு இந்த விருது வழங்க சின்மயி, பார்வதி உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இந்த விருது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என ஓஎன்வி விருது குழு அறிவித்தது. மேலும் தனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட விருதை சர்ச்சை காரணமாக திருப்பி தருவதாக வைரமுத்து தெரிவித்தார்.
இதுஒருபுறம் இருக்க நெட்டிசன் ஒருவர் சின்மயிடம், ‛‛வைரமுத்துவை ஏன் உங்கள் திருமணத்திற்கு அழைத்தீர்கள், ஏன் அவரது காலில் விழுந்தீர்கள்'' என கேட்டு போட்டோவை வெளியிட்டார். இதற்கு பதிலளித்த சின்மயி, ‛‛அவரை கூப்பிட சொல்லி டார்ச்சர் பண்ணதே அவர் மகன் தான்'' என பதிலளித்தார். இவரின் பதிலை மேற்கோள் காட்டி மதன் கார்கியிடம் இதுப்பற்றி கேள்வி எழுப்பினார்.
அதற்கு மதன் கார்கி டுவிட்டரில், ‛‛இது மற்றுமொரு பொய். அவர் தான் என் தந்தையை தனது திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் என் தந்தை அவர் மீது அதிருப்தியில் இருந்ததால் பார்க்க மறுத்துவிட்டார். அதன் பிறகு என்னிடம் சொல்லி அவரை பார்க்க அனுமதி பெற்று தர சொன்னார். நானும் செய்தேன். அதன்பின் என் தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்றார். மேலும் சிலர் உங்களது தாய், தந்தையை வெறுத்து அவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும்போது நீங்கள் யாரை நம்புவீர்கள்? என்று ஒரு கேள்வி எழுப்பி நான் எனது தந்தையை நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ள மதன்கார்க்கி, தங்கள் பக்கம் உண்மை இருப்பதுபோல் குற்றம் சாட்டுபவர்கள் நம்பினால் அதை அவர்கள் சட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் செல்லட்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.