ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வம்சி பைடிபள்ளி. இவர் விஜய் நடிக்க உள்ள 66வது படத்தை இயக்கப் போவதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வெளிவந்தன. சமீபத்திய பேட்டி ஒன்றில் அது உண்மைதான் என வம்சி பைடிபள்ளி தெரிவித்திருக்கிறார்.
“எனது திரையுலகப் பயணத்தில் இப்படம் மிகப் பெரும் பட்ஜெட் படமாக இருக்கும். கோவிட் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு படம் பற்றிய அறிவிப்பு வரும். தில் ராஜு இப்படத்தைத் தயாரிக்கிறார், தளபதி விஜய் நாயகனாக நடிக்கிறார்,” எனத் தெரிவித்துள்ளார்.
வேறொரு கதையாசியர் படத்தின் கதையை எழுதித் தருகிறார். அதன்பின் அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை நடத்தி வருகிறோம். அதை முடிப்பதற்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது. அந்த வேலைகள் முடிந்ததும் அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்கிறார்.
வம்சி பைடிபள்ளி தெலுங்கில் பிரபாஸ் நடித்த முன்னா, ஜுனியர் என்டிஆர் நடித்த பிருந்தாவனம், ராம் சரண் நடித்த எவடு, கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ஊபிரி - தமிழில் தோழா, மகேஷ்பாபு நடித்த மகரிஷி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவரும் விஜய்யும் இணையும் படம் பான்-இந்தியா படமாக உருவாக உள்ளது.
விஜய், தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு அப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும்.