மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
சென்னை : அரசு அறிவிக்கும் வரை படப்பிடிப்பு நடத்தப்படாது என தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்த பின், அரசு அனுமதிக்கும் போது படப்பிடிப்பு பணிகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை, விஜய், விக்ரம், சூர்யா, கமல், சிவகார்த்திகேயன் ஆகியோரின் புதுப்படம் உள்ளிட்ட, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான படங்கள், முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: சின்னத்திரை மற்றும் சினிமா படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த அமைச்சரிடம் வேண்டினோம். ஆனால் கொரோனா தொற்று அதிகம் பாதித்துள்ள நிலையில், முதல்வர் அறிவித்துள்ள ஊரடங்கை தமிழ் திரையுலகமும் கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஊரடங்கு காலத்தில் திரைத்துறை சார்ந்த எந்த பணிகளையும் செய்வதில்லை என முடிவு எடுத்துள்ளோம். கொரோனா பரவல் குறையும் போது, அரசு அறிவிக்கும் தளர்வுக்கு பின் திரைப்பட பணிகள் தொடரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.