தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ராகுல் சன்க்ரித்யன் இயக்கத்தில் மிக்கி ஜே மேயர் இசையமைப்பில், நானி, சாய் பல்லவி, கிரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'ஷியாம் சிங்க ராய்'.
இப்படத்தின் முதல் பார்வை படத்தின் நாயகன் நானியின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதியன்று வெளியிடப்பட்டது. கோல்கட்டா பின்னணியில் உருவாகும் இப்படத்தின் முதல் பார்வையில் கம்பீரமாக நின்று கொண்டடிருக்கும் நானியை பின்பக்கத்திலிருந்து முகம் காட்டாமல் ஒரு பெண் கட்டிப்பிடித்திருப்பது போன்ற போஸ்டர் வெளியானது.
படத்தில் மூன்று பேர் கதாநாயகிகள் என்பதால் அந்தப் பெண் யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. இன்று நடிகை சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய பர்ஸ்ட் லுக் பார்வையை இன்று வெளியிட்டுள்ளார்கள்.
பெங்காலி ஆடை அணிந்து பெங்காலிப் பெண் போன்ற தோற்றத்துடன் கையில் சூலாயுதம் ஏந்தி நிற்கும் சாய் பல்லவியின் போஸ்டர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. நானியைக் கட்டிப்பிடித்தபடி இருக்கும் முதல் போஸ்டரின் பெண் இவர்தானோ என்று ரசிகர்கள் சந்தேகிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
படத்தில் இருக்கும் இன்னும் இரண்டு நாயகியரின் தோற்றப் புகைப்படங்கள் வெளிவரும் போது ரசிகர்களின் அந்த சந்தேகம் தீர்ந்துவிடும். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை சாய்பல்லவிக்கு ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.