எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழ் நடிகரான விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும், அறிமுக நட்சத்திரங்களான வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி கதாநாயகன், நாயகியாகவும் நடித்து பெரிய வசூலைக் குவித்த தெலுங்குப் படம் 'உப்பெனா'. இப்படம் ஏப்ரல் 18ம் தேதியன்று டிவியில் முதல் முறை ஒளிபரப்பானது. பெரிய படங்களுக்கு இணையாக இப்படத்தின் டிவி ரேட்டிங்கும் இருக்கும் என திரையுலகத்தில் எதிர்பார்த்தார்கள். அது போலவே படத்தின் ரேட்டிங்கும் வந்துள்ளது.
இப்படத்திற்கு 18.5 ரேட்டிங் கிடைத்துள்ளது. அறிமுக நட்சத்திரங்கள் நாயகன், நாயகியாக நடித்த ஒரு படத்திற்கு இந்த அளவிற்கு டிவி ரேட்டிங் கிடைப்பது இதுவே முதல் முறை.
தெலுங்குப் படங்களில் இதுவரையிலும் அதிகபட்ச ரேட்டிங்கைப் பெற்ற படமாக அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடித்த 'அலா வைகுந்தபுரம்லோ' படம் உள்ளது. அப்படம் 29.4 ரேட்டிங்கைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
தமிழில் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படம் தெலுங்கில் 'பிச்சகாடு' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்று பின்னர் டிவியில் ஒளிபரப்பான போது 18.7 ரேட்டிங்கைப் பெற்றது. அப்படத்தை விடவும் 'உப்பெனா' 0.2 ரேட்டிங் குறைவாகத்தான் பெற்றுள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. தமிழிலிருந்து தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியான படங்களின் டிவி ரேட்டிங்கில் 'ரோபோ' படம் 19.04 ரேட்டிங்குடன் முதலிடத்தில் உள்ளது.