மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழ் டிவிக்களில் முதல் முறையாக பலரது கவனத்தை ஈர்த்த, பல சர்ச்சைகளை உருவாக்கிய ரியாலிட்டி ஷோ என்று 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைச் சொல்லலாம். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் முடிவடைந்தாலும் முதல் சீசனில் கலந்து கொண்ட நடிகை ஓவியா தான் பலரின் மனங்களைக் கவர்ந்தார். அந்நிகழ்ச்சியில் சுற்றியிருந்தவர்களின் நெருக்கடியை ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் நிகழ்ச்சியை விட்டே பாதியில் வெளியேறினார். இருந்தாலும் இப்போதும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி என்றால் ஓவியாவின் ஞாபகம் டிவி நேயர்களுக்கு வந்துவிடும்.
ஓவியா இன்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். டுவிட்டரில் அதற்காக 'காமன் டிபி'யை வெளியிட்ட மூன்றாம் சீசனின் போட்டியாளரான சனம் ஷெட்டி, ஓவியாவை மிகவும் புகழ்ந்துள்ளார்.
“ரியாலிட்டி ஷோக்களின் முதல் ரியல் குயின். உலக அளவில் இதயங்களை வென்றவர், முதல் ஆர்மி பக்கங்களுக்குக் காரணமானவர். அவருடைய அப்பாவித்தனத்திற்காகவும், போராட்ட குணத்திற்காகவும் நினைவு கூற வேண்டியவர். ஒன் அன்ட் ஒன்லி ஓவியாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்,” எனப் பாராட்டியுள்ளார் சனம். அதற்கு ஓவியா உங்கள் அன்பான வாத்தைகளுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.