மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சென்னை: இந்தியன் 2 படத்தை முடிப்பது தொடர்பாக, தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் தரப்பு இடையே நடந்த சமரச பேச்சு தோல்வி அடைந்து விட்டதாக, சென்னை உயர் நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்னையை தீர்க்க கமல் முன்வருவாரா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கமல் நடிக்கும், இந்தியன் -2 படத்தை முடித்து கொடுக்காமல், வேறு படங்களை இயக்க, இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி, படத் தயாரிப்பு நிறுவனமான லைகா, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது
இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், விசாரணைக்கு வந்தது. இரு தரப்பும் கலந்து பேசி, பிரச்னைக்கு சுமுக தீர்வு காணும்படி, முதல் பெஞ்ச் அறிவுறுத்தியது. வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஷங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஏப்., 24ல் பேச்சு நடந்தது. ஜூன் முதல் அக்டோபருக்குள் படத்தை முடித்து கொடுத்து விடுவதாக, இயக்குனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதை, தயாரிப்பு நிறுவனம் ஏற்கவில்லை. ஜூன் மாதத்தில் படத்தை முடிக்க, தயாரிப்பு நிறுவனம் வலியுறுத்தியதால், பேச்சு தோல்வி அடைந்தது. எனவே, வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார். இதையடுத்து, விசாரணையை, ஜூன் மாதத்துக்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது. ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் தெரிவித்தது.
கமல் சமரசம் செய்வாரா
இந்தியன் 2 படம் ஏதோ ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்குமான பிரச்னை என்று மட்டும் ஏற்க முடியாது. அப்படியே அவர்கள் இருவர் தரப்பு பிரச்னை என்றாலும் படத்தின் ஹீரோவான கமல், இந்த விஷயத்தில் மவுனமாய் இருப்பது திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் கமல் இன்று, நேற்று சினிமாவிற்கு வந்தவர் அல்ல, தமிழ் சினிமாவே கொண்டாடிய நடிகர்களில் ஒருவர். நடிகர் மட்டுமல்லாது, இயக்குனர், தயாரிப்பாளரும் கூட. ஆகவே அவர்களின் நிலை என்னவென்று உணர்ந்தவர்.
மேலும் இது தனது படம் என்பதால் கமலே, இதில் தலையிட்டு இந்த பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என்பது திரையுலகினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏற்கனவே லைகா நிறுவனத்தில் அவர் நடித்த சபாஷ் நாயுடு படம் பாதி வளர்ந்த நிலையில் டிராப் ஆனது. அடுத்து இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான் என இந்நிறுவனத்திற்கு அடுத்தடுத்து படங்களில் இவர் நடிக்கிறார். ஆகவே அதை உணர்ந்து கமல் இப்பிரச்னையில் தலையிட்டு இந்தியன் 2 படத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது திரையுலகினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.