ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
விக்ரம் நடிப்பில் தான் இயக்கிய அந்நியன் படத்தை ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து ரீமேக் செய்கிறார் ஷங்கர். ஆனால் இந்த தகவலை அவர் வெளியிட்ட போது அந்நியன் படத்தை தயாரித்த ஆஸ்கர் ரவிச்சந்திரன, அந்நியன் படத்தின் கதைக்கான முழு உரிமையை எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து தான் வாங்கியிருப்பதாக தெரிவித்தவர், அந்நியன் ரீமேக் செய்யும் உரிமை ஷங்கருக்கு இல்லை என ஒரு கடிதம் வாயிலாக தெரிவித்தார்.
அதையடுத்து டைரக்டர் ஷங்கர், அந்நியன் படத்திற்கு சுஜாதா வசனம் மட்டுமே எழுதினார். அதனால் படக்கதையின் முழு உரிமை எனக்கு மட்டுமே உள்ளது என்று தனது சார்பில் ஒரு விளக்கம் கொடுத்தார். இந்த நிலையில் இந்த பிரச்சினையை தற்போது தான் உறுப்பினராக இருக்கும், செளத் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ்க்கு கொண்டு சென்றுள்ளார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அதையடுத்து ஷங்கருக்கு இதுகுறித்த விளக்கம் கேட்டு கடிதம் எழுத முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.