இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
விக்ரம், சதா, விவேக் நடிப்பில் ஷங்கர் இயக்கிய படம் அந்நியன். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். இந்த படத்தை இப்போது ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து ரீ-மேக் செய்ய உள்ளார் ஷங்கர். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது ராம்சரண் படத்தை இயக்கும் ஷங்கர், அதன்பிறகு இந்தியன் 2 படத்தை முடித்ததும், இந்த படத்தை துவங்க எண்ணி உள்ளார். இதற்கிடையே இக்கதை உரிமம் தொடர்பாக ஷங்கருக்கும், ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பாடு ஏற்பட்டு மோதல் ஆரம்பமானது.
இந்நிலையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனும், அந்நியன் படத்தை ஹிந்தியில் எடுக்க போவதாக ஒரு பேட்டியில் கூறி உள்ளார். இதில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் மற்றும் பெரிய பாலிவுட் நட்சத்திரத்தை வைத்து தயாரிக்க இருப்பதாகவும், வரும் ஏப்ரலில் இதற்கான பணிகள் ஆரம்பமாகும் என அவர் கூறியுள்ளார்.