'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
மும்பையில் நிரந்தரமாக தங்கியிருக்கும் ஸ்ருதிஹாசன், படப்பிடிப்புகளுக்காக மட்டுமே சென்னை, ஐதராபாத்துக்கு வந்து செல்கிறார். தமிழில் லாபம் படத்தில் நடித்திருப்பவர், தெலுங்கில் கிராக், வக்கீல்சாப் படங்களுக்கு பிறகு பிரபாசுடன் சலார் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இத்தாலி நடிகரும், மாடலுமான மைக்கேல் கோர்சலை பிரிந்த பிறகு சில மாதங்கள் தனிமையில் இருந்து வந்த ஸ்ருதிஹாசன், இப்போது சாந்தனு ஹசாரிகா என்பவருடன் டேட்டிங் செய்து வருகிறார். அவரது படங்களையும் தவறாமல் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் ஸ்ருதிஹாசன், தனது பிறந்த நாளில் அவர் தன்னை ஆரத்தழுவி வாழ்த்திய போட்டோக்களையும் வெளியிட்டார்.
இந்தநிலையில் தற்போது மும்பையில் ஊரடங்கு என்பதால், சாந்தனு மற்றும் தனது செல்ல நாய் குட்டியுடன் தான் பொழுதை கழித்து வருவதாகவும் தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், தனது காதலனும், செல்ல நாய்க்குட்டியும் இந்த கடினமான காலங்களில் ஆறுதலளிக்கும் நண்பர்களாக இருப்பதாக சொல்லி ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.