நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் | தினமும் அதிகாலை 3 மணிக்கு திரிஷ்யம் கிளைமாக்ஸை எழுதினேன் : ஜீத்து ஜோசப் | நரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் சினிமாவாகிறது | 'பராசக்தி' வெளியீடு தள்ளிப் போகவே வாய்ப்பு ? | ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்திய நடிகரின் வாழ்க்கை சினிமா ஆகிறது | தெலுங்கு காமெடி நடிகர் பிஷ் வெங்கட் காலமானார் | ரேக்ளா ரேஸ் பின்னணியில் உருவாகும் 'சோழநாட்டான்' |
தமிழில் 'நேரம்' படம் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா நசீம். அதன்பின் 'ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடிப் பேசவும், திருமணம் எனும் நிக்காஹ்' ஆகிய படங்களில் நடித்தார். குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நஸ்ரியா திடீரென மலையாள நடிகரான பகத் பாசிலைத் திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு விலகினார்.
சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது தெலுங்கில் முதல் முறையாக நடிக்க உள்ளார். விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி கதாநாயகனாக நடிக்கும் 'அன்டே சுந்தரநிக்கி' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
இது பற்றி நஸ்ரியா, “எனது முதல் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம். முதல் என்பது எப்பவுமே ஸ்பெஷல்தான். 'அன்டே சுந்தரநிக்கி'யும் ஸ்பெஷல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக ஐதராபாத்திற்கு தனது கணவர் பகத் பாசிலுடன் சென்றுள்ளார். அதனால், பகத்தும் தெலுங்கில் அறிமுகமாக உள்ள 'புஷ்பா' படத்தில் நடிக்கப் போகிறார் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால், அவர் மனைவி நஸ்ரியாவுக்குத் துணையாகத்தான் தற்போது சென்றுள்ளாராம். 'புஷ்பா' படத்தின் படப்பிடிப்பு தற்போது இல்லை என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.