பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை |
மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் ஜீத்து ஜோசப். குறிப்பாக மோகன்லாலை வைத்து இவர் இயக்கத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் மலையாளத்தையும் தாண்டி தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் மிகப்பெரிய அளவு ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கின்றன. முன்னணி ஹீரோக்கள் பலர் இவரது படங்களில் நடிக்க காத்திருந்தாலும் இவர் தனது கதைக்கான சாதாரண நடிகர்களை மட்டுமே தேடி போகிறார். அந்தவகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இயக்குனரும் நடிகருமான பஷில் ஜோசப்பை வைத்து 'நுனக்குழி' படத்தை இயக்கியவர், தற்போது நடிகர் ஆசிப் அலியை வைத்து 'மிரஜ்' என்கிற படத்தை இயக்கி வந்தார்.
இதற்கடுத்ததாக விரைவில் 'த்ரிஷ்யம்-3' படம் துவங்க இருக்கிறது என்றும் அதற்கான ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் கூட மோகன்லால் அறிவித்திருந்தார். அதனால் விரைவில் 'த்ரிஷ்யம் 3' துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சின்ன பட்ஜெட்டில் உருவாகும் புதிய படம் ஒன்றை துவங்கியுள்ளார் ஜீத்து ஜோசப்.
மலையாளத்தில் முன்னணி குணச்சித்திர நடிகர்களாக, ரசிகர்களின் வரவேற்பை பெற்ற பிஜூமேனன் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் இருவரும் இந்த படத்தில் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். படத்திற்கு 'வலது வாசத்தே கள்ளன்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம், அதன் தீர்ப்புகள் ஏற்படுத்தும் தாக்கம் இவற்றின் பின்னணியில் இந்த கதை ஜீத்து ஜோசப்பின் பாணியில் வழக்கமான சில ட்விஸ்ட்டுகள் கலந்து உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.