எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. ஹிந்தியிலும் வெப்சீரிஸில் நடித்து வருகிறார். தற்போது முதன்முறையாக சொந்தமாக ஒரு படத்தை தனது ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸின் சார்பில் தயாரித்துள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ‛சுபம்' என பெயரிட்டுள்ளார். பிரவீன் காந்த்ரேகுலா இயக்கி உள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. வரும் மே 9ல் படம் ரிலீஸாகிறது. இதையொட்டி படத்தினை புரொமோஷன் செய்து வருகிறார்.
சமந்தா கூறுகையில், ‛‛எனது முதல் இரண்டு படங்களை இப்போது பார்த்தால் எனக்கு வெட்கமாக உள்ளது. நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்தேன் என யோசிக்கிறேன். ஆனால் சுபம் படத்தில் நடித்துள்ளவர்களின் நடிப்பை பார்த்து பெருமைப்படுகிறேன்'' என்றார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்த ‛விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் சமந்தா. அந்த படத்தின் தெலுங்கு பதிப்பான ‛யே மாய சேசாவே' படத்தில் நாக சைதன்யா ஜோடியாக நடித்து நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் நடித்தபோது தான் இவர்களுக்குள் காதல் மலர்ந்து, கல்யாணம் வரை சென்று பின்னர் பிரிந்தனர். தனது முதல் படத்தை பற்றி சமந்தா இப்படி பேசியிருப்பது நாகசைதன்யா மீதான வெறுப்பால் என்பது தெளிவாக தெரிகிறது.