இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' |
உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் உயரிய விருதாக ஆஸ்கர் விருதுகள் கருதப்படுகிறது. 2025ம் ஆண்டில் வெளியாகும் படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு 2026, மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
2026 ஆஸ்கர் விருதுகளுக்காக சில புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் ஆஸ்கர் விருது போட்டிக்காக வந்த சில படங்களை 'அகாடமி வாக்காளர்கள்' பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. அதற்காக, 'அகாடமி வாக்காளர்கள்' வாக்களிப்பதற்கு முன்பாக அவர்கள் பார்த்த அனைத்து படங்களையும் 'பார்த்துவிட்டோம்' என்பதை உறுதி செய்தாக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களை அதற்குரிய பிரத்யேக இணையதளத்தில் கண்காணிக்கவும் முடிவெடுத்துள்ளார்கள்.
அதுமட்டுமல்லாது, 'ஏஐ' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படங்களை வரவேற்கும் விதமாகவும் சில வழிகாட்டுதல்களை அகாடமி வெளியிட்டுள்ளது. ஒரு மனிதன் எந்த அளவிற்கு படைப்பாற்றல் மிக்க படைப்பாளியாக இருக்கிறார் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்வதாக அகாடமி கூறியுள்ளது.
கடந்த வருட ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படங்களான 'தி ப்ரூட்டலிஸ்', மற்றும் 'எமிலியா பெரெஸ்' படங்களை ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது குறித்து சர்ச்சை எழுந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.