புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
மலையாள திரையுலகில் நடிகைகளிடம், நடிகர்கள் உள்ளிட்ட திரையுலகில் பணியாற்றும் பலர் பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் நடிகை வின்சி அலோசியஸ் என்பவர் வில்லன் நடிகரான ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருளை உட்கொண்டுவிட்டு தன்னிடம் படப்பிடிப்பில் உடையை சரி செய்வதற்குரிய உதவி செய்ய வரவா என்று கேட்டு அத்துமீறி நடந்ததாக குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் பிரபல மலையாள குணச்சித்ர நடிகையான மாலா பார்வதி என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், இப்படி திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் குறித்து கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.
இதுபற்றி அவர் கூறும்போது, “இப்போது இருக்கும் பெண்கள் பலருக்கும் சின்ன விஷயத்தை கூட பூதாகரமாக்கி பார்க்கும் மனோபாவம் வந்துவிட்டது. ஒரு சிறிய ஜோக்கை கூட அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. 'நான் உன் ஆடையை சரி செய்ய உதவட்டுமா? உன்னுடன் கூட வரட்டுமா? என்னுடன் உறங்க விருப்பமா?' என்பது போன்ற கேள்விகளை எதிர்கொண்டால் அப்படிப்பட்டவர்களை கெட் லாஸ்ட் என்று சொல்லிவிட்டு அடுத்த வேலைகளை கவனிக்க போய்விட வேண்டியது தானே. இதை பெரிய பிரச்னையாக்கினால் இந்த திரையுலகில் எப்படி நீடித்து பயணிக்க முடியும். இது போன்ற சிக்கல்களை கையாள பெண்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
தவறு செய்த ஆண்களை தட்டிக்கேட்பதை விட்டுவிட்டு பெண்கள் எப்படி இதை கையாள வேண்டும் என கருத்து கூறிய மாலா பார்வதியின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாரதிராஜாவின் இயக்கத்தில் 'கடலோர கவிதைகள், முதல் மரியாதை' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரஞ்சனி, மாலா பார்வதிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களை பார்த்து வெட்கப்படுகிறேன் மாலா பார்வதி. நீங்கள் ஒரு சைக்காலஜிஸ்ட் மற்றும் லாயராக இருந்தும் கூட இது போன்ற விஷயங்களை எப்படி ஆதரிக்கிறீர்கள் என ஆச்சரியமாக இருக்கிறது. இதுதான் உங்களுடைய குணத்தையும் காட்டுகிறது. ரொம்ப வருத்தமாக இருக்கிறது. உங்கள் மீது எனக்கு எந்த மரியாதையும் இல்லை” என்று கூறியுள்ளார் ரஞ்சனி.