மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |
மலையாள திரையுலகில் கடந்த வருடம் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, திரை உலகில் உள்ள பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்கள். இதில் மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் முக்கிய நிர்வாகிகளான சில நடிகர்களின் மீதும் இந்த குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதால் அதற்கு தார்மீக பொறுப்பேற்று நடிகர் சங்க தலைவரான மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருடன் சேர்ந்து முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். விரைவில் நடிகர் சங்கத்திற்கான புதிய தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக பலரும் தற்போது விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஆக்டிவாக செயல்பட்டு வந்த குணச்சித்திர நடிகை மாலா பார்வதி இந்த மறு தேர்தல் குறித்து கூறும்போது, “நடிகர் சங்கத்தில் இருந்த பல நிர்வாகிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்தன. நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது அப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்தபோது கூட அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் வில்லன் நடிகர் பாபுராஜ் மீது அப்படி ஒரு பாலியல் குற்றச்சாட்டு வந்தபோது அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்தார். இத்தனைக்கும் மோகன்லால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கூட அவர் கேட்கவில்லை. அப்படி அவர் மறுத்ததால் தான் இனி இந்த தலைவர் பதவியில் இருப்பதற்கு அவசியம் இல்லை என்று கருதிய மோகன்லால் அதன்பிறகு ராஜினாமா செய்தார்” என்று ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் மாலா பார்வதி.