மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்றுள்ளது. தொடர்ந்து எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகர் விவேக். ‛மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர். தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார். ரஜினி, கமல் தொடங்கி இப்போதுள்ள நடிகர்கள் வரை 200க்கும் அதிகமான படங்களில் காமெடி நடிகராக நடித்தார். நான் தான் பாலா, வெள்ளைப்பூக்கள் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
படங்களில் சமூக கருத்துக்களை கூறி சின்னக்கலைவாணர் என பெயர் எடுத்தவர். சமூகம் சார்ந்த விஷயங்களுக்கும் குரல் கொடுப்பவர். பசுமை இந்தியாவை முன்னெடுத்து கோடிக்கணக்கான மரக்கன்றுகளை இவர் நட்டுள்ளார். தொடர்ந்து அது தொடர்பான விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். கொரோனா காலத்தில் இசையிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர், நாட்டு நலன் குறித்து விஷயங்களையும் தனது கருத்தாக டுவிட்டரில் தெரிவித்து வந்தார்.