டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி. அதோடு அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டு வருகிறார். குறிப்பாக, சோசியல் மீடியாவில் அவர் வெளியிடும் போட்டோக்களும், பதிவுகளும் நெட்டிசன்களின் கிண்டல்களுக்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார் ஜூலி. அதைப்பார்த்த ஒரு நெட்டிசன், எல்லோரும் நல்லா பாத்துக்கோங்க. இதுதான் அந்த வீர தமிழச்சி என்று அவரை கடுப்பேற்றும் வகையில் கமெண்ட் கொடுத்துள்ளார்.
அதற்கு டென்சனாகாத ஜூலி, வீரம் டிரஸ்ல இல்ல புரோ. உங்களை மாதிரி கமெண்ட்ஸ் போடுறவங்களை நாலு வருசமா பேஸ் பண்ணி கெத்தா இருக்கிறது தான் வீரம் என்று பதில் கொடுத்துள்ளார்.




