மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்டமான இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் ஷங்கர். அவர் இதுவரையிலும் அதிகமான சர்ச்சைகளில் சிக்கியதில்லை. ஆனால், 'இந்தியன் 2' பட விவகாரத்தில் தயாரிப்பாளரே வழக்கு தொடுக்கும் அளவிற்கு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இப்படத்தை முடிக்காமல் வேறு படத்தை அவர் இயக்கக் கூடாது என்றே தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்ததன் காரணம்.
கடந்த வருடம் கிரேன் விபத்து காரணமாக மூவர் அகால மரணமடைந்ததை அடுத்து 'இந்தியன் 2' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகவேயில்லை.
ராம் சரண் நடிக்கும் ஒரு தெலுங்குப் படத்தை ஷங்கர் இயக்க உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அடுத்து 'அந்நியன்' படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்க உள்ள அறிவிப்பும் இன்று(ஏப்., 14) வெளியாகிவிட்டது.
இதன் காரணமாக 'இந்தியன் 2' படத்தின் கதி என்னவென்பது குறித்து கமல்ஹாசன் ரசிகர்கள் அதிகம் கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.
படத்தின் தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்த காரணத்தால் 'இந்தியன் 2' விவகாரத்தில் ஷங்கர் நிச்சயம் ஈகோ பார்ப்பார். இனியும் அப்படம் தொடர வேண்டுமென்றால் அவர் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் அல்லது கமல்ஹாசன் தலையிட வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை கமல்ஹாசன் தலையிடுவாரா என்பதும் சந்தேகம்தான்.
தமிழ் சினிமாவில் அதிக கோடிகளை முதலீடு செய்துள்ள ஒரு நிறுவனத்திற்கு இப்படி ஒரு நிலையா என கோலிவுட்டில் 'உச்' கொட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.