சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் |

தமிழ் சினிமாவை தனது நடிப்பினாலும், வசன உச்சரிப்பினாலும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போனவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரது வரவினால் சினிமாவில் புதிய சகாப்தம் தொடங்கியது. இவரது இளைய மகன் பிரபு தனது முதல் படமான சங்கிலி படத்திலேயே தந்தை சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்திருந்தார்.. இயக்குனர் ஸ்ரீதரின் சகோதரர் சி.வி.ராஜேந்தரன் இயக்க, தேவராஜ் தயாரித்திருந்தார். இப்படம் கடந்த 1982ல் ஏப்., 14ல் தமிழ் புத்தாண்டு அன்று வெளியானது. அந்த வகையில் இவர் திரைத்துறைக்கு வந்து இன்று ஶ்ரீ பிலவ தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதுடன் 40ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
முதல் படத்திலேயே அப்பாவுடன் நடித்தவர், அவருடன் மட்டும் 19 படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்துடன் தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், குசேலன், சந்திரமுகி படத்திலும், நடிகர் கமல்ஹாசனுடன் வெற்றி விழா, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்திலும் பிரபு நடித்திருந்தார். நடிகர் திலகம் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் இயக்குனர் பி.வாசு. இளைய திலகம் பிரபுவுடன் அதிக படங்களில் இணைந்து பணியாற்றி இயக்கியவர் என்பது குறிப்பிடத் தகுந்தது. பிரபுவுடன் அதிகப் படங்களில் இணைந்து நடித்திருக்கிற நடிகைகள் ராதா, குஷ்பு.
இப்போதும் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வருகிறார். கேரளத்தின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இவர் நடித்துள்ள தேசிய விருது பெற்ற மரைக்காயர் விரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறது. இதுதவிர, மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், சாந்தனுவுடன் ராவணக் கூட்டம், பிக்பாஸ் முகெனுடன் வேலன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதுதவிர கன்னடத்தில் 'த்ரிஷ்யம் 2' படத்திலும், தெலுங்கில் 3 படங்களிலும் மற்றும் மலையாளத்தில் 2 படங்களிலும் நடித்து வருகிறார்.
கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். சிவாஜி பட நிறுவனம் தயாரிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் 824 நாட்கள் திரையில் ஓடி சாதனை படைத்துள்ளது. தென்னக திரையுலகில் அதிக நாட்கள் ஓடிய இப்படத்தை தயாரித்த பெருமைக்குரியவர் பிரபு ஆவார்.